Wednesday, August 26, 2009
Saturday, August 15, 2009
பதவி மறுமையில் பாதகத்தை ஏற்படுத்திவிடுமோ
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்கள்;உமர்(ரலி) அவர்களிடம் (அன்னார் தாக்கப்பட்டபோது) 'நீங்கள் உங்களுக்குப் பின் யாரையாவது உங்கள் பிரதிநிதியாக (ஆட்சித் தலைவராக) நியமிக்கக் கூடாதா?' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், 'நான் எவரையேனும் எனக்குப் பின் ஆட்சித் தலைவராக நியமித்தால் (அது தவறாகாது); ஏனென்றால், (எனக்கு முன்பு) என்னைவிடச் சிறந்தவரான அபூ பக்ர்(ரலி) அவர்கள் அவ்வாறு ஆட்சித் தலைவரை (என்னை) நியமித்துச் சென்றிருக்கிறார்கள். (எவரையும் ஆட்சித் தலைவராக நியமிக்காமல்) அப்படியே நான்விட்டுவிட்டாலும் (அதுவும் தவறாகாது); ஏனெனில், என்னைவிடச் சிறந்தவர்களான இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அவ்விதம் தான் (யாரையும் நியமிக்காமல்)விட்டுச் சென்றிருக்கிறார்கள்' என்றார்கள். உடனே நபித்தோழர்கள் உமர்(ரலி) அவர்களைப் பாராட்டினார்கள். அப்போது உமர்(ரலி) அவர்கள், '(என் கருத்து) பிடித்தோ பிடிக்காமலோ (என்னை நீங்கள் பாராட்டுகிறீர்கள். நான் வகித்த இந்தப் பதவி இறைவனிடம்) எனக்குச் சாதகமாகவும் வேண்டாம்; பாதகமாகவும் வேண்டாம்; சரிக்குச் சமமாக அமைந்த நிலையில் இதிலிருந்து நான் தப்பித்தாலே போதும் என்றே விரும்புகிறேன். நான் உயிரோடு இருக்கும்போது (தான் பதவியைச் சுமந்தேன் என்றால், எனக்குப் பின் ஒருவரை நியமிப்பதன் மூல)ம் இறந்த பிறகும் இதைச் சுமக்க நான் தயாராயில்லை' என்று கூறினார்கள்.
ஆதாரம்;புஹாரி எண் 7218
பதவிக்கு வருபவர்கள் அந்த பதவியை இந்த உலகில் சுகவாழ்க்கை வாழ்வதற்கான கருவியாக பயன்படுத்திவரும் நிலையை பார்க்கிறோம். ஆனால் சுவனம் வாக்களிக்கப்பட்ட உமர்[ரலி] அவர்கள், இந்த பதவி எனக்கு மறுமையில் பாதகத்தை ஏற்படுத்தாமல் நான் தப்பித்தாலே போதும் என்று கூறியதோடு, அடுத்த ஆட்சி தலைவராக நான் யாரையாவது தேர்ந்தெடுத்து அதற்காகவும் அல்லாஹ்விடம் பதில் சொல்ல நான் விரும்பவில்லை என்ற ரீதியில் பதிலளித்ததை பார்க்கும்போது, அந்த நல்லற தோழர்கள் பதவியை முள் படுக்கையாகவே கருதிவந்துள்ளனர். நம்மைபோல் சுகம்தரும் மஞ்சமாக அதை கருதவில்லை என்பதை உணரவேண்டும். மேலும், இன்று நம்முடைய அறிஞர்களில் சிலரும், தவ்ஹீத்வாதிகளில் சிலரும் மற்றவர்களை தனக்கு சமமாக கருதுவதில்லை.மதரசாவில் படித்து பட்டம் வாங்காத ஒருவன் ஒரு அறிஞரை நோக்கி கேள்வி எழுப்பினால், 'இவனுக்கு நான் பதிலளிப்பதா? என்னுடய தொண்டர்கள் பதிலளிப்பார்கள் என்று மாற்றாரை இழிவாக கருதுவதை பார்க்கமுடிகிறது. ஆனால் 'உமரின் நாவில் அல்லாஹ் பேசுகிறான்' என்று நபியவர்களால் சிலாகித்து சொல்லப்பட்ட உமர்[ரலி] அவர்கள், அபூபக்கர்[ரலி] அவர்களை பற்றி குறிப்பிடும்போது, 'என்னை விட சிறந்தவர்' என்று கூறி தன்னுடைய சக தோழரை கண்ணியப்படுத்திய உமர்[ரலி அவர்களின் இந்த வாழ்க்கையில், 'தலைக்கனம்' பிடித்து திரிபவர்களுக்கு தக்க படிப்பினை உள்ளது.
அல்லாஹ் உமர்[ரலி] அவர்களை பொருந்திக்கொள்வானாக!
--8/14/2009 12:27:00 AM அன்று ஸஹாபாக்களின் வாழ்வினிலே... இல் முகவை எஸ்.அப்பாஸ் ஆல் இடுகையிடப்பட்டத�
ஸஹாபாக்களின் வாழ்வினிலே...
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ'
மூன்று விஷயங்களில் இறைவன் என் கருத்துக்கேற்ப 'வஹி' அருளியுள்ளான். அவை, 'இறைத்தூதர் அவர்களே! மகாமு இப்ராஹீம் என்ற இடத்தில் தொழுமிடத்தை நாம் ஆக்கிக் கொள்ளலாமே!' என்று நான் கூறியபோது, 'மகாமு இப்ராஹீமில் நீங்கள் தொழுமிடத்தை ஆக்கிக் கொள்ளுங்கள்!" (திருக்குர்ஆன் 02:125) என்ற வசனம் அருளப்பட்டது. 'இறைத்தூதர் அவர்களே! தங்களின் மனைவியருடன் உரையாட வருபவர்களில் நல்லவர்களும் கெட்டவர்களும் உள்ளனர். எனவே தங்களை அன்னிய ஆண்களிடமிருந்து மறைத்துக் கொள்ளுமாறு தங்களின் மனைவியருக்கு தாங்கள் உத்திரவிடலாமே!' என்றேன். அப்போது ஹிஜாப் (பர்தா) பற்றிய வசனம் அருளப்பட்டது. நபி(ஸல்) அவர்களின் மனைவியர் அனைவரும் சேர்ந்து நபி(ஸல்) அவர்களுக்கு ஆத்திரமூட்டும் விதமாக நடந்தபோது நபி(ஸல்) அவர்கள் 'உங்களை விவாகரத்துச் செய்தால் உங்களை விடச் சிறந்த மனைவியரை உங்களுக்குப் பதிலாக இறைவன் அவர்களுக்கு ஆக்கிவிடுவான்' என்று கூறினேன். நான் கூறியவாறே (திருக்குர்ஆன் 66:05) வசனம் அருளப்பட்டது" என உமர்(ரலி) அறிவித்தார்.
ஆதாரம்;புஹாரி எண் 402
Subscribe to:
Posts (Atom)