Monday, March 23, 2009

கேள்வி 3 -டாக்டர் ஜாக்கிர் நாயக்

காஃபிர்களை கண்ட இடத்தில் வெட்டுங்கள். அவர்களை கொலை செய்யுங்கள் என்று சொன்னதின் மூலம் - இஸ்லாமிய மார்க்கம் வன்முறையையும் - இரத்தம் சிந்துவதையும் - மூர்க்கத்தனத்தையும் தூண்டுவதாக இல்லையா?


பதில்:


இஸ்லாம் வன்முறையை தூண்டக் கூடிய மார்க்கம் என்னும் கட்டுக் கதையை நிலைநிறுத்த வேண்டி - அருள்மறை குர்ஆனில் ஒருசில தேர்ந்தெடுக்கப்பட்ட வசனங்களை தவறுதலாக புரிந்து கொண்டு - இஸ்லாமியர்களுக்கு - இஸ்லாம் அல்லாதவர்களை கொல்லச்சொல்லி வற்புறுத்துவதாக சொல்கிறார்கள்.



1. அருள்மறை குர்ஆனின் வசனம்:



இஸ்லாத்தை விமரிசிப்பவர்கள் அருள்மறை குர்ஆனின் ஒன்பதாவது அத்தியாயம் ஸுரத்துத் தௌபாவின் 05வது வசனத்தின் ஒரு பகுதியை மாத்திரம் எடுத்துக் கொண்டு இஸ்லாமிய மார்க்கம் வன்முறையையும் - இரத்தம் சிந்துவதையும் - மூர்க்கத்தனத்தையும் தூண்டக் கூடிய மார்க்கம் என்பதற்கு ஆதாரமாக காட்டப்படுகிறார்கள்.



'முஷ்ரிக்குகளை (இறைவனுக்கு இணைவைப்பவர்களையும், இறை மறுப்பாளர்களையும்) கண்ட இடங்களில் வெட்டுங்கள்' என்கிற வசனம்தான் அது.





2. மேற்படி வசனம் போர்ச் சூழலில் சொல்லப்படுகிற வசனம்:



இஸ்லாத்தை விமரிசிப்பவர்கள் - மேற்படி வசனம் எந்த சூழலில் சொல்லப்பட்டது என்பதை வசதியாக மறந்து விட்டு - விமரிசனம் செய்கிறார்கள். மேற்படி வசனம் எதனால் - எந்த சூழ்நிலையில் சொல்லப்படுகின்றது என்பதை தெளிவாக அறிந்து கொள்ள வேண்டுமெனில,; - மேற்படி அத்தியாயத்தின் முதலாம் வசனத்திலிருந்து படிக்க வேண்டும். மேற்படி வசனம் மக்காவில் உள்ள இஸ்லாமியர்களுக்கும் - இறைவனுக்கு இணைவைப்பவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட சமாதான ஒப்பந்தம் பற்றி தெரிவிக்கின்றது. மேற்படி ஒப்பந்தம் மக்காவில் உள்ள இணை வைப்பவர்களால் மீறப்பட்டது. எனவே மீறப்பட்ட ஒப்பந்தத்தை சரி செய்ய வேண்டி இணைவப்பவர்களுக்கு நான்கு மாத காலம் அவகாசம் அளிக்கப் பட்டது. இல்லையெனில் அவர்கள் மீது போர் தொடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.



அருள்மறை குர்ஆனின் ஒன்பதாவது அத்தியாயம் ஸுரத்துத் தௌபாவின் 05வது வசனம் கீழ்க்கணடவாறு கூறுகின்றது:



'போர் விலக்கப்பட்ட சங்கைமிக்க மாதங்கள் (நான்கு மாதங்கள்) கழிந்து விட்டால் முஷ்ரிக்குகளை கண்ட இடங்களில் வெட்டுங்கள். அவர்களை பிடியுங்கள். அவர்களை முற்றுகையிடுங்கள். ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் அவர்களை குறிவைத்து உட்கார்ந்திருங்கள். ஆனால் அவர்கள் (மனந்திருந்தி, தம் பாவங்களிலிருந்து) தவ்பா செய்து மீண்டு, தொழுகையையும் கடைபிடித்து, (ஏழை வரியாகிய) ஜகாத்தும் (முறைப்படிக்) கொடுத்து வருவார்களானால் (அவர்களை) அவர்கள் வழியில் விட்டு விடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், கிருபையுடைய வனாகவும் இருக்கின்றான்.' (அல் குர்ஆன் 9: 5)



மேற்படி வசனம் ஒரு போர்ச் சூழலில் சொல்லப்படுகின்றது.



3. அமெரிக்க - வியட்நாம் போர் - ஓர் உதாரணம்:



அமெரிக்காவிற்கும் வியட்நாமிற்கும் இடையே போர் நடந்த செய்தி நாம் அனவைரும் அறிந்த ஒன்று. அவ்வாறு போர் நடந்து கொண்டிருக்கும் பொழுது, அமெரிக்க ஜனாதிபதியோ அல்லது அமெரிக்க ராணுவத் தளபதியோ, அமெரிக்க வீரர்களிடம் - 'எங்கெல்லாம் நீங்கள் வியட்நாம் காரர்களை காண்கிறீர்களோ - அவர்களை கொல்லுங்கள்' என்று உத்தரவிடுகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். மேற்படி போர்ச் சூழலைப் பற்றி குறிப்பிடாமல் - தனியே 'எங்கெல்லாம் நீங்கள் வியட்நாம் காரர்களை காண்கிறீர்களோ - அவர்களை கொல்லுங்கள்' என்று சொன்னதாக சொன்னால் - நாம் அமெரிக்க ஜனாதிபதியையோ அல்லது அமெரிக்க ராணுவத் தளபதியையோ மிகப்பெரிய கொலையாளி என்றுதான் எண்ணத் தோன்றும். மாறாக அமெரிக்காவிற்கும் - வியட்நாமிற்கும் இடையே போர் நடந்து கொண்டிருந்த பொழுது அமெரிக்க ஜனாதிபதி மேற்கண்டவாறு சொன்னார் என்று குறிப்யிட்டால் அது அறிவு பூர்வமாகத் தோன்றும். அமெரிக்க ஜனாதிபதி, அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு தைரிய மூட்டுவதற்காக அவ்வாறு சொன்னார் என்றும் எடுத்துக் கொள்ளலாம்.



4. அருள்மறை குர்ஆனின் மேற்படி வசனம் இஸ்லாமிய போர் வீரர்களுக்கு தைரிய மூட்டுவதற்காக சொல்லப்பட்டதே.!

அதுபோலவே அருள்மறை குர்ஆன் அத்தியாயம் ஒன்பது ஸுரத்துத் தௌபாவின் ஐந்தாவது வசனம் இஸ்லாமிய போர் வீரர்களுக்கு தைரிய மூட்டுவதற்காக சொல்லப்பட்டது. போர் நடக்கும் பொழுது எதிரிகளை கண்டு பயந்து விடாதீர்கள். அவர்களை வெட்டி வீழ்த்துங்கள் என்ற இஸ்லாமிய போர் வீரர்களுக்கு தைரியமூட்டுகிறது, அருள்மறை குர்ஆனின் மேற்படி வசனம்.



5. அருண் சூரி ஐந்தாவது வசனத்திலிருந்து 7வது வசனத்திற்கு தாவி விடுகிறார்:



இஸ்லாத்தைப் பற்றி விமரிசிப்பதையே வழக்கமாகக் கொண்டவர் இந்தியாவின் பிரபல பத்திரிக்கையாளர் அருண் சூரி. அவர் எழுதியுள்ள ' ஃபத்வாக்களின் உலகம்' என்கிற புத்தகத்தின் 572 வது பக்கத்தில் அருள்மறையின் மேற்படி வசனத்தைச் சுட்டிக் காட்டியுள்ளார். ஐந்தாவது வசனத்தை சுட்டிக்காட்டியுள்ள அவர் உடனடியாக ஏழாவது வசனத்திற்கு தாவி விடுகிறார். இதன் மூலம் அருண் சூரி ஐந்துக்கும் ஏழுக்கும் இடையில் உள்ள 6வது வசனத்தை விட்டுவிட்டார் என்பது அறிவுள்ள எந்த மனிதரும் புரிந்து கொள்ளலாம்.



6. அருள்மறை குர்ஆனின் ஒன்பதாவது அத்தியாயம் ஸுரத்துத் தவ்பாவின் 6வது வசனம் மேற்படி கட்டுக்கதை உண்மையல்ல என்பதை தெளிவாக உணர்த்துகிறது.



அருள்மறை குர்ஆனின் ஒன்பதாவது அத்தியாயம் ஸுரத்துத் தவ்பாவின் ஆறாவது வசனம் இஸ்லாம் வன்முறையையும் - இரத்தம் சிந்துவதையும் - மூர்க்கத்தனத்தையும் தூண்டக் கூடிய மார்க்கம் இல்லை என்பதை தெளிவாக உணர்த்துகிறது. அருள்மறை வசனம் கீழ்க்கண்டவாறு கூறுகிறது..



'(நபியே!) முஷ்ரிக்குகளில் யாரேனும் உம்மிடம் புகலிடம் தேடி வந்தால், அல்லாஹ்வுடைய வசனங்களை அவர் செவியேற்கும் வரையில் அவருக்கு அபயமளிப்பீராக!. அதன்பின் அவரை பாதுகாப்பு கிடைக்கும் வேறு இடத்திற்கு ( பத்திரமாக) அனுப்பபுவீராக. ஏனென்றால் அவர்கள் நிச்சயமாக அறியாத சமூகத்தினராக இருக்கிறார்கள்.'(அல் குர்ஆன் 9:6)



அருள்மறை குர்ஆன் போர் நடந்து கொண்டிருக்கும் பொழுது இறைவனுக்கு இணைவைப்பவர்கள் உங்களிடம் புகலிடம் தேடுவார்கள் எனில், அவர்களுக்கு அபயமளியுங்கள் என்று சொல்வதோடு நின்று விடாமல், அவர்கள் ஒரு பாதுகாப்பான இடத்திற்கு சென்றடையும் வரை அவருக்கு பாதுகாப்பளியுங்கள் என்றும் வலியுறுத்துகிறது. இன்றைய நவநாகரீக உலகத்தில் அமைதியை விரும்பும் ஒரு ராணுவத் தளபதியாக இருந்தால் - போர் நடந்து கொண்டிருக்கும் பொழுது, எதிரி ராணுவ வீரர்களை மன்னித்து விட்டுவிடலாம். ஆனால் எந்த ராணுவ தளபதி எதிரி ராணுவ வீரர்களை, அவர்கள் ஒரு பாதுகாப்பான இடத்தைச் சென்றடையும்வரை அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கச் சொல்லி உத்தரவிட்டிருக்கிறார்?.



இஸ்லாமிய மார்க்கம் வன்முறையையும் - இரத்தம் சிந்துவதையும் - மூர்க்கத்தனத்தையும் தூண்டக் கூடிய மார்க்கம் இல்லை. அமைதியையும் - சமாதானத்தையும் விரும்பக்கூடிய மார்க்கம் என்பதை மேற்கூறிய குர்ஆனிய வசனத்திலிருந்து அறிந்து கொள்ளலாம்.

-டாக்டர் ஜாக்கிர் நாயக்

Friday, March 20, 2009

கேள்வி (1 & 2) பதில் : டாக்டர் ஜாக்கிர் நாயக்

கேள்வி எண் 1.

குர்ஆன் முஹம்மது (ஸல்) அவர்களால் எழுதப்பட்டது. அது இறை வேதமல்ல என்பது தானே உண்மை?



கேள்வி எண் 2.



குர்ஆனின் பல பிரதிகள் உஸ்மான் (ரலி) அவர்கள் காலத்தில்; உஸ்மான் (ரலி) அவர்களால் எரிக்கப்பட்டது. குர்ஆன் இறைவனால் அருளப்பட்டதல்ல. மாறாக உஸ்மான் (ரலி) அவர்களால் தொகுப்பட்ட பிரதிதானே தற்போதுள்ள குர்ஆன்?.



பதில்:



இஸ்லாத்தின் மூன்றாவது கலிபா உஸ்மான் (ரலி) அவர்கள் காலத்தில் ஒன்றுக் கொன்று முரண்பட்ட பல குர்ஆனின் பிரதிகளை தொகுத்து ஒரே குர்ஆனாக உருவாக்கப் பட்டதுதான் இன்றைய அருள்மறை என்பது, குர்ஆனை பற்றி உலவுகின்ற கட்டுக்கதைகளில் ஒன்று. எந்த அருள்மறை முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ்வால் இறக்கியருளப்பட்டதோ அதே அருள்மறைதான், இஸ்லாமிய உலகத்தினரால் பெரிதும் போற்றி மதிக்கப்படும் அல்லாஹ்வின் வேதமாக இன்றும் இவ்வுலகில் திகழ்கின்றது. இன்றைக்கு இருக்கும் அருள்மறை குர்ஆன் அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் நேரடி கண்காணிப்பில் தொகுக்கப்பட்ட ஒன்று. கட்டுக்கதைக்கான ஆணிவேர் எது என்று நாம் இப்போது ஆய்வு செய்வோம்.



1. அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் நேரடி கண்காணிப்பின் கீழ் தொகுக்கப்பட்டு, அவர்களால் சரிபார்க்கவும் பட்டதுதான் இன்றைக்கு நம்மிடையே எழுத்து வடிவில் இருக்கும் அருள்மறை குர்ஆன்.



அல்லாஹ்வால் அருள்மறை குர்ஆனின் வசனங்கள் அண்ணல் நபி முஹம்மது (ஸல்) அவர்களுக்கு இறக்கியருளப்பட்டவுடன், அதனை அவர்கள் மனனம் செய்து கொள்வார்கள். பின்னர் இறக்கியருளப்பட்ட குர்ஆன் வசனங்களை தனது தோழர்கள் அனைவருக்கும் தெரிவித்து, தனது தோழர்களையும் மனனம் செய்து கொள்ளச் செய்வார்கள். அத்துடன் அல்லாஹ்வால் இறக்கியருளப்பட்ட குர்ஆன் வசனங்களை தனது தோழர்களை கொண்டு எழுதிக்கொள்ளவும் செய்வார்கள். எழுதிக்கொண்ட வசனங்களை சரியானதுதானா என்று மீண்டும் பலமுறை உறுதி செய்து கொள்வார்கள். அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் (ருஅஅi) எழுதவும், படிக்கவும் தெரியாதவர்கள். எனவேதான் இறைவனால் அருள்மறை வசனங்கள் இறக்கியருளப்பட்டதும் - அந்த வசனங்களை தனது தோழர்களுக்கு தெரிவிப்பார்கள். அண்ணல் நபி (ஸல்) அவர்களின் தோழர்களும் நபிகளால் தெரிவிக்கப்பட்ட இறைமறை வசனங்களை எழுதிவைத்துக் கொள்வார்கள். தம் தோழர்களால் எழுதிவைக்கப்பட்ட வசனங்களை மீண்டும் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் - தம் தோழர்களை வாசிக்கக் சொல்லி கேட்டு சரியானதுதானா என்பதை உறுதிசெய்து கொள்வார்கள். அவ்வாறு எழுதப்பட்டதில் தவறுகள் ஏதேனும் இருந்தால் அதனை உடனயடியாக திருத்தி எழுதச் சொல்லி - அந்த தவறுகளையும் திருத்திக் கொள்வார்கள். அதேபோன்று தம் தோழர்களால் மனனம் செய்யப்பட்ட வசனங்களும் - தம் தோழர்களால் எழுதப்பட்ட வசனங்களும் சரியானது தானா என்பதை - மேற்படி வசனங்களை மனனம் செய்த தம் தோழர்களை ஓதச் சொல்லி அதனையும் உறுதி செய்து கொள்வார்கள். இவ்வாறாக அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி முஹம்மது (ஸல்) அவர்களின் நேரடி கண்காணிப்பின் கீழ் அல்லாஹ்வால் இறக்கியருளப்பட்ட அருள்மறை குர்ஆனின் வசனங்கள் அருள்மறை குர்ஆனாக தொகுக்கப்பட்டது.



2. அருள்மறை குர்ஆனின் அத்தியாயங்களும் அத்தியாயத்தின் வசனங்களும், அல்லாஹ்வால் அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டது.



அருள்மறை குர்ஆன் அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கு இருபத்து இரண்டரை ஆண்டு காலங்களில் அவசியம் ஏற்படும் போதெல்லாம் சிறிது, சிறிதாக இறக்கியருளப்பட்டது. குர்ஆனிய வசனங்கள் அது இறக்கியருளப்பட்ட கால வரிசைப்படி தொகுக்கப்படவில்லை. அருள்மறை குர்ஆனின் அத்தியாயங்களும் அந்த அத்தியாயங்களுக்கு உண்டான வசனங்களும் அல்லாஹ்வால் - வானவர் கோமான் - ஜிப்ரில் (அலை) அவர்கள் மூலம், அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது. அல்லாஹ்வால் இறக்கியருளப்பட்ட குர்ஆனிய வசனங்களை எப்போதெல்லாம் நபி (ஸல்) அவர்கள் தனது தோழர்களுக்கு அறவிக்கிறார்களோ, அப்போதெல்லாம் அந்த குர்ஆனிய வசனம் எந்த அத்தியாயத்தைச் சார்ந்தது, அந்த அத்தியாயத்தின் எந்த வசனத்திற்கு அடுத்துள்ள வசனம் என்பதையெல்லாம் நபி (ஸல்) அவர்கள் தனது தோழர்களுக்கு அறிவிப்பார்கள். அண்ணல் நபி (ஸல்) அவர்கள்.வருடத்தின் ஒவ்வொரு ரமலான் மாதத்திலும், அந்த வருடம் முழுவதும் இறக்கியருளப்பட்ட வசனங்களை வானவர் கோமான் - ஜிப்ரில் (அலை) அவர்களிடம் - வசனங்களின் வரிசைக்கிரமங்களையும், சரியான வசனங்கள் தானா என்பதையும் உறுதிபடுத்திக் கொள்வார்கள். நபி (ஸல்) அவர்கள் உயிரோடிருந்த கடைசி ஆண்டில் அருள்மறை குர்ஆன் முழுவதும் சரியானதுதானா என்று இரண்டு முறை சரிபார்க்கப்பட்டது.



மேற்குறிப்பிட்ட முறைகள் மூலம் அண்ணல் நபி (ஸல்) உயிரோடிருந்த காலத்திலேயே - அருள்மறை குர்ஆனின் எழுத்து வடிவமும்- அருள்மறை குர்ஆனை மனனம் செய்த தோழர்களின் மனப்பாட வடிவமும் - நபிகளாரின் நேரடி கண்காணிப்பின் கீழ் சரிபார்க்கப்பட்டு - தொகுக்கவும் பட்டது என்பதற்கு மேற்கண்ட விளக்கங்கள் சான்றாக அமைந்துள்ளன.



3. அருள்மறை குர்ஆன் ஒரு பொதுவான வடிவில் பிரதியெடுக்கப்பட்டது.



அண்ணல் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் அருள்மறை குர்ஆனின் வசனங்கள் அதன் சரியான வரிசைக் கிரமப்படி இருந்தது. ஆனால் அருள்மறை குர்ஆனின் வசனங்கள் துண்டு துண்டான தோல்களிலும், தட்டையான கல் துண்டுகளிலும், மரப் பட்டைகளிலும், பேரீத்த மரத்தின் கிளைகளிலும், மற்றுமுள்ள மரக் கிளைகிலும் தனித்தனியாக எழுதப்பட்டிருந்தது. அண்ணல் நபி (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பிறகு ஆட்சி பொறுப்பேற்றுக் கொண்ட முதல் கலீஃபா அபூபக்கர் (ரலி) அவர்கள், பல பொருட்களிலும் தனித்தனியாக எழுதப்பட்டு இருந்த அருள்மறை குர்ஆனின் வசனங்களை, ஒரே இடத்தில் இருக்கும்படியாக தாள் (ளூநநவள) போன்ற ஒரு பொதுவான பொருளில் - எழுதும்படி பணித்தார்கள். அவ்வாறு பல பொருட்களில் எழுதப்பட்டு இருந்த அருள்மறை குர்ஆனின் வசனங்களை தாள் போன்ற பொருளில் எழுதி - அருள்மறை குர்ஆனின் மொத்தத் தொகுப்புகள் எதுவும் - சிதறிப்போய் விடக்கூடாது என்பதற்காக அதனைக் கட்டியும் வைத்தார்கள்.



4. உஸ்மான் (ரலி) அவர்கள் ஒரே பொருளில் தொகுத்து எழுதப்பட்டிருந்த அருள்மறை குர்ஆனை பிரதி எடுக்கும் பணியை மேற்கொண்டார்கள்.



அருள்மறை குர்ஆனின் வசனங்களை அண்ணல் நபி (ஸல் ) அவர்கள் தம் நாவால் மொழியும் போதெல்லாம், அண்ணல் நபி (ஸல்) அவர்களின் தோழர்கள் அதனை தாமாகவே எழுதி வைத்துக் கொள்வார்கள். அவ்வாறு தோழர்களால் எழுதி வைக்கப்பட்ட வசனங்களில் நபி (ஸல் ) அவர்களால் சரிபார்க்கப்படாத வசனங்களும் உண்டு. அவ்வாறு நபி (ஸல்) அவர்களால் சரிபார்க்கப்படாத வசனங்களில் தவறுகள் இருக்க வாய்ப்புகள் இருக்கலாம் . தவிர அண்ணல் நபி (ஸல்) அவர்கள் சொன்ன அருள்மறை வசனங்கள் எல்லாவற்றையும் - எல்லா நபித்தோழர்களும் நேரடியாக கேட்டிருக்கக் கூடிய வாய்ப்புகள் குறைவு. ஆதலால் சில நபித் தோழர்கள் - சில வசனங்களை தவற விடக் கூடிய சந்தர்ப்பங்கள் ஏற்ப்பட்டிருக்கலாம் என்பன போன்ற விவாதங்கள், இஸ்லாமிய அரசின் மூன்றாவது கலீஃபா உஸ்மான் (ரலி) அவர்கள் காலத்தில் வாழ்ந்திருந்த இஸ்லாமியர்களிடையே உருவானது.



மேற்படி விவாதங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்க விரும்பிய உஸ்மான் (ரலி) அவர்கள், அண்ணல் நபி (ஸல்) அவர்களால் சரிபார்க்கப்பட்ட அருள்மறை குர்ஆனை, அப்போது உயிரோடிருந்த அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அன்பு மனைவியார் ஹஃப்ஸா (ரலி) அவர்களிடமிருந்து பெற்றுக் கொண்டார்கள். பெற்றுக் கொண்ட அருள்மறை குர்ஆனை - நபி (ஸல்) அவர்கள் குர்ஆனிய வசனங்கள் அருளப்பட்ட பொதெல்லாம் தம் தோழர்களுக்கு சொல்லும் பொழுது - அதனை எழுதி வைத்துக் கொண்ட தோழர்களில் நான்கு பேரை தேர்வு செய்து - தேர்வு செய்யப்பட்டவர்களில் ஸெய்த் பின் தாபித் (ரலி) அவர்களின் தலைமையில் அருள்மறை குர்ஆனை இன்னும் சிறந்த முறையில் பிரதியெடுக்கச் செய்தார்கள். அவ்வாறு பிரதியெடுக்கப்பட்ட அருள்மறை குர்ஆன் உஸ்மான் (ரலி) அவர்களால் இஸ்லாமிய மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.



தவிர அண்ணல் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் வாழ்ந்த நபித்தோழர்கள் தங்களிடம் சிலர் அருள்மறை குர்ஆனின் வசனங்களை வைத்திருந்தார்கள். அவ்வாறு வைத்திருந்த வசனங்களில் சில முற்றிலும் பூர்த்தியாகத வசனங்களும் - எழுத்துப்பிழையுள்ள வசனங்களும் இருக்கலாம். இதன் காரணத்தால் உஸ்மான் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களின் நேரடி கண்காணிப்பில் தொகுக்கப்படாத வசனங்கள் எதுவும் மக்களிடம் இருந்தால், அதனை அழித்துவிடும்படி மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்கள். அண்ணல் நபி (ஸல்) அவர்களின் நேரடி கண்காணிப்பில் தொகுக்கப்பட்ட அருள்மறை குர்ஆனின் பிரதிகள் இரண்டு இப்போதும் பல நாடுகளாக சிதறுண்டு போன ரஷ்யாவின் தலைநகர் தாஷ்கண்டில் உள்ள அருங்காட்சியகத்திலும், துருக்கி நாட்டின் தலைநகர் இஸ்தான்புல்லில் உள்ள அருங்காட்சியகத்திலும் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.



5. அரபி மொழியை சரியான முறையில் உச்சரிக்க வேண்டி அரபி மொழி அல்லாதவர்களுக்காக பிரித்தறியக் கூடிய குறியீடுகள் சேர்க்கப்பட்டது.



அண்ணல் நபி (ஸல்) அவர்களின் நேரடி கண்காணிப்பில் தொகுக்கப்பட்ட அருள்மறை குர்ஆனில் - அரபி மொழி அல்லாதவர்களும் - அரபி மொழியை சரியான முறையில் உச்சரிக்க வேண்டி - பிரித்தறியக் கூடிய குறியீடுகள் சேர்க்கப்படாமல் இருந்தது. இக்குறியீடுகளை - ஃபத்ஆ - தம்மா - கஸ்ரா என்று அரபி மொழியிலும், ஸபர் - ஸேர் - பேஷ் என்று உருது மொழியிலும் அழைப்பார்கள். அரபி மொழி அரபியர்களின் தாய்மொழி என்பதால் - அருள்மறை குர்ஆனின் வசனங்களை சரியான முறையில் உச்சரித்து ஓதுவதற்கு - அரபியர்களுக்கு மேற்படி குறியீடுகள் தேவையில்லை. ஆனால் அரபி மொழியைத் தாய் மொழியாக கொண்டிராதவர்களுக்கு - குர்ஆனின் வசனங்களை சரிவர ஓத வேண்டுமெனில் மேற்படி குறியீடுகள் அவசியம். மேற்படி குறியீடுகள் ஹிஜ்ரி 66-86 வரை (கி பி. 685 முதல் 705 வரை) ஆட்சி புரிந்த - உமையா - காலத்தின் ஐந்தாவது கலீஃபா - மாலிக் அர்-ரஹ்மான் என்பவரால் அல்-ஹஜ்ஜாஜ் என்பவர் ஈராக்கில் கவர்னராக இருந்த காலத்தில் அருள்மறை குர்ஆனில் இணைக்கப்பட்டது.



தற்போது நம்மிடையே இருக்கும் அருள்மறை பிரித்தறியக் கூடிய குறியீடுகளை கொண்டிருக்கிறது. ஆனால் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் நேரடி கண்காணிப்பில் தொகுக்கப்பட்ட அருள்மறையில் இவ்வாறான குறியீடுகள் இல்லை என்ற காரணத்தால் குர்ஆனில் வேறுபாடுகள் இருக்கின்றது என்று சிலர் வாதிடலாம். அவ்வாறு வாதிடுவோர்கள் 'குர்ஆன்' என்ற வார்த்தைக்கு 'ஓதுதல்' என்ற பொருள் உண்டு என்பதை அறியாதவர்கள். எனவே குர்ஆனை அதன் வசனங்களின் உச்சரிப்பு மாறாமல் ஓதுவதுதான் இங்கு முக்கியமேத் தவிர, எழுத்துக்களோ அல்லது பிரித்தறியக் கூடிய குறியீடுகளோ அல்ல. அரபி வார்த்தைகளின் உச்சரிப்பு சரியானதாக இருக்கும் பட்சத்தில், அதன் அர்த்தங்களும் சரியானதாகத்தான் இருக்கும்.



6. அருள்மறை குர்ஆனை பாதுகாப்பதாக அல்லாஹ் வாக்குறுதியளிக்கிறான்:



அருள்மறை குர்ஆனின் பதினைந்தாவது அத்தியாயம் ஸுரத்துல் ஹிஜ்ரின் ஒன்பதாவது வசனத்தில் அல்லாஹ் அருள்மறை குர்ஆனை அவனே பாதுகாப்பதாக கூறுகின்றான்:



'நிச்சயமாக நாம் தான் (நினைவூட்டும்) இவ்வேதத்தை (உம்மீது) இறக்கி வைத்தோம். நிச்ச்யமாக நாமே அதன் பாதுகாவலனாகவும் இருக்கிறோம்.' (அல்-குர்ஆன் 15 : 9)



-டாக்டர் ஜாக்கிர் நாயக்

Monday, March 16, 2009

அசந்துப் போகும் அதிசயம்.

ஏகஇறைவனின் திருப்பெயரால்....

(அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்)

أَفَلَا يَنظُرُونَ إِلَى الْإِبِلِ كَيْفَ خُلِقَتْ
ஒட்டகம் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது என்பதை அவர்கள் பார்க்க வேண்டாமா? 88:17.


அசந்துப் போகும் அதிசயம்.

இதற்கு முன் பசுவின் இறைச்சியில் புழு இருப்பதில்லையா ? என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில் உலகில் தோற்றுவிக்கப்பட்ட உயிரிணங்களில் இறைவன் தன்னுடைய படைப்பாற்றலை வெளிப்படுத்துவதற்காக அதில் அதிசயிக்கத்தக்கப்பல மாற்றங்களை ஏற்படுத்தி விடுவான். என்று எழுதி இருந்தோம்.



ஏகஇறைவன் தனது படைப்பினங்கள் பலவற்றில் (ஒன்றிலிருந்து மற்றொன்று பார்ப்பதற்கு ஒன்றுப் போலவே இருந்தாலும்) அதனுடைய உடலுக்குள் உள்ள உறுப்புகளில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தி விடுவான்.



உதாரணத்திற்கு ஏற்கனவே சுட்டிக்காட்டிய விதம் எத்தனை சுத்தமான தொழுவத்தில் உயர்தர உணவு வகைகள் கொடுத்து வளர்த்தாலும் பன்றியின் இறைச்சியில் இயற்கையாக வளரும் புழுக்களின் உற்பத்தியை தடுக்க முடிவதில்லை.



அதேப்போன்று ஆடு, மாடு, கோழிப்போன்ற உண்ணுவதற்கு இறைவனால் அனுமதிக்கப்பட்ட கால்நடைகள் சில நேரங்களில் கழிவுகளை உண்டாலும் அதனுடைய இறைச்சியில் மாற்றங்கள் ஏற்படாமல் ப்யூர் மட்டனாக கிடைக்கிறது.



இறைவன் படைத்தப் படைப்பி;னங்களின் அமைப்பில் மனிதன் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது என்பதற்கு மேலைநாட்டு கோக் மட்டன் பெரிய உதாரணமாகும்.



ஒட்டகத்தின் இறைச்சியும், அதனுடைய பாலும்

உலகிலேயே கால்நடைகள் தரும் பாலில் அதிகசத்து நிறைந்துக் காணப்படுவது ஒட்டகப் பாலில் என்பதை நாம் அனைவரும் நன்கறிவோம். இத்தனை அபரிமிதமான சத்தை வழங்கக்கூடிய ஒட்டகத்தின் பிரதான உணவு என்னத்தெரியுமா ?



முட்செடிகளும், காய்ந்த சருகுகளுமாகும் !.



முட்செடிகளையும் காய்ந்த சருகுகளையும் மேயந்து விட்டு இத்தனை அபரிமிதமான சத்துள்ளப பலை ஒட்டகம் தருகிறது என்றால் இறைவன் தனது ஆற்றலை மனிதர்கள் புரிந்து கொள்ளும் விதம் இதன் மூலமாகவும் வெளிப்படுத்துவதை கவனிக்க வேண்டும்.



பாலைவனத்தில் வாழ்க்கை நடத்திய அந்தக்கால மக்கள் உண்பதற்கே உணவு வகைகள் கிடைக்காத காலமது என்பதால் ஒட்டகத்திற்கு அவர்களால் எங்கிருந்து உயர்தர தீவணங்கள் கொண்டு வந்து கொடுக்க முடியும் ? தாராளமாக கிடைத்தால் கொடுப்பதில் எவ்வித நஷ்டமுமில்லை காரணம் அதற்கு கொடுப்பதை வட அதனிடமிருந்து பயணடைவது அதிகம். அது இன்றைய காலத்தில் வீடுகளில் வளர்க்கப்படும் நாய்கள் போன்ற செல்லப்பிராணி அல்ல அந்த மக்களுக்கு அன்று ஒட்டகம் தவிர்க்க முடியாத பிராணி ஒட்டகமில்லாமல் அவர்களால் எங்கும் பயணிக்க முடியாத நிலை அதனால் எத்தனை உயர்தர தீவணங்கள் வேண்டுமானாலும் கொடுக்கலாம் அந்தளவுக்கு திருப்பி பலனலிக்கக் கூடியது ஒட்டகம். ஆனாலும் கொடுக்க முடியாது.



அதற்கு காரணம் ஒன்று அவர்களது வறுமை, மற்றொன்று எளிதில் கிடைக்காது அதனால் அந்த சூழ்நிலைக்கொப்ப அங்கு எளிதில் கிடைபதைக் கொண்டு ஒட்டகம் தனது உணவை போதுமாக்கிக் கொள்வதற்காக பாலைவனத்தில் முளைக்கின்ற முட்செடிகளை அவற்றிற்கு உணவாக்கி அதை இலகுவாக உண்பதற்கு அவற்றின் உதடுகளை ரப்பர் போன்று இறைவன் வடிவமைத்தான்.



முட்செடிகளை உண்ணும்பொழுது அதனுடைய ரப்பர் போன்ற உதடுகளில் முட்கள் பட்டு நொறுங்கி விழுந்து இலைகள் மட்டுமே வாயிக்குள் செல்லும். அந்தளவுக்கு கைதேர்ந்தப் படைப்பாளன் ஏகஇறைவன் மிக நேர்த்தியாக ஒட்டகத்தை வடிவமைத்தான். SôúU @YoLû[l TûPjúRôm. @YoL°u @ûUlûT YÛlTÓj§ú]ôm. 76:28



அவ்வாறான முட்செடிகளையும், காய்ந்த சருகுகளையும் உண்டு தரக்கூடிய ஒட்டகத்தின் பாலில் மனிதனின் உடல்நலத்திற்கு சிறந்த ஆரோக்கியத்தையும், நோய் நிவாரணிகளையும் ஏற்படுத்தினான் ஏகஇறைவன்.



அந்தக் காலத்தில் அரேபியர்கள் மிகவும் திடகாத்திரமான உடலமைப்புடன் ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள் அரேபியர்கள் அந்தளவுக்கு ஆரோக்கியமாக வாழ்ந்ததற்கு கீரை, காய்கறிகள், பழங்கள் போன்றவைகள் சாப்பிட வில்லை அவைகள் பாலைவனத்தில் முளைப்பதில்லை அவர்களுடைய உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியையும், ஆரோக்கியத்தையும் வழங்கிக் கொண்டிருந்ததற்கு அவர்கள் தினந்தோறும் அருந்தி வந்த ஒட்டகப்பால் முக்கிய காரணியாகத் திகழ்ந்தது. ( இன்றைய அரேபியர்கள் அவ்வாறில்லை இவர்கள் பெப்ஸி கோலாவிலும். அஜினா மோட்டா உணவிலும் மூழ்கி உடல் ஆரோக்கியத்தைக் கெடுத்துக் கொண்டிருக்கி;னறனர்).



காலம் கடந்தேனும் இன்றைய மக்கள மேல்படி ஒட்டகப் பாலில் மற்றப் பாலை விட எந்தளவுக்கு சத்துக் கூடுதலாக இருக்கிறது என்றும்> அவைற்றினால் உடல் நலத்திற்கு என்ன மாதிரியான நன்மைகள் கிடைக்கின்றன என்றும்> என்ன மாதிரியான நோய்களை எதிர்க்கும் ஆற்றல் இருக்கி;னறன என்றும் விரிவான ஆய்வுகள் செய்து அறிவிக்கின்றனர்.



இந்தளவுக்கு உடல் ஆரோக்கியத்திற்கும்> நோய்களை எதிர்க்கும் திறன் வாய்ந்த சத்தானப் பாலைத் தருகின்ற ஒட்டகம் உட்கொள்ளும் உணவு காய்ந்த சருகுகளும், முட்செடிகளும் தான் என்றால் வியப்பாக இல்லையா ? அது தான் உயிரிணங்களின் மீது இறைவன் ஏற்படுத்திய அமைப்பை யாரும் மாற்ற முடியாது.



நோய் நிவாரணிகளும், உடல் ஆரோக்கியமும்

ஒட்டகத்தின் பாலில் தனித்தன்மை வாய்ந்த இன்சுலின் உள்ளது இது நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்தது. பசும் பால் அலர்ஜி உள்ளவர்கள் ஒட்டகப்பாலை பயப்படாமல் குடிக்கலாம் ஏனென்றால் இதில் உள்ள புரோட்டீன்கள் வித்தியாசமானது மேலும் இதில் பாக்டிரியா, வைரஸ் எதிரப்பு சக்திகள் (Bactericidal, Virucidal) இயற்கையாகவே அமைந்துள்ளது. மேலும் விஞ்ஞான ஆராய்ச்சிகள் இது Sever skin condition, Auto immune diseases, Psoriasis, Multiple Sclerosis போன்ற நோய்களையும் குணப்படுத்தும்.



விட்டமின் பீ,சீ சத்துக்களை நிறையக் கொண்ட ஒட்டகப் பாலில், பசுப் பாலில் இருப்பதைவிட பத்து மடங்கு அதிகமான இரும்புச் சத்து இருப்பதாக ஐ.நா. சபை அறிவித்துள்ளது. பசும்பாலை விட இனிப்புக் குறைவான ஒட்டகப் பால், வளைகுடா நாடுகளெங்கும் அபரிதமாக அருந்தி வருகின்றார்கள். Harrods, Fortnum & Mason போன்ற பாரிய விற்பனை நிலையங்கள், பெட்டிகளில் அடைக்கப்பட்ட ஒட்டகப் பாலை விற்பனை செய்வதில் உள்ள ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளன. விட்டமின் சத்துடையது என்பது மட்டுமல்ல, புற்றுநோய், எயிட்ஸ் போன்றவற்றை எதிர்க்கும் சக்தியையும் ஒட்டகப்பால் கொண்டிருக்கின்றது. ஆதாரம்: http://tamilcyber.com/home/index.php?option=com_content&task=view&id=80&Itemid=1



நம்மில் பலர் பசும் பால் அல்லது எருமைப் பாலை அருந்தியிருப்போம். ஏன், தமிழக கிராமங்களில் ஆட்டுப் பால் கூட குடித்திருப்பார்கள். ஆனால் ஒட்டகப் பால் பற்றி அறிந்திருக்கிறீர்களா? ஒட்டகப் பாலின் மருத்துவ குணங்கள் அளவிடற்கரியது. ஒட்டகப்பாலில் உள்ள மருத்துவ பலன்களில் ஆண்மையின்மையை போக்கும் பலனும் உள்ளது. இந்திய சந்தையில் ஒட்டகப் பாலுக்கு உள்ள வரவேற்பைப் பயன்படுத்திக் கொள்ளும் விதமாக ராஜஸ்தான் பால் சங்கம் (ஆர்எம்எஃப்) அண்மையில் ஒட்டகப் பால் பாக்கெட்டுகள் விற்பனையை அறிமுகப்படுத்தியது. தற்போது ஒட்டகப் பால் பாக்கெட்டுகள் ஜெய்ப்பூர், பிகானிர், புதுடெல்லி மற்றும் புதுடெல்லியில் உள்ள சராஸ் பால் கடைகளில் கிடைக்கின்றன.

ஒட்டகப் பாலில் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் தவிர ஆண்மையின்மையை போக்கக்கூடிய திறனுடன் சர்க்கரை நோயாளிகளுக்கும் ஏற்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில், ஒட்டகப் பாலுக்கு நல்ல வரவேற்பு இருப்பதாக ஆர்.எம்.எஃப். அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சர்க்கரை நோய்க்கு ஒட்டகப்பால் மிகவும் சிறந்தது என்றும், ஒட்டகப்பாலின் குணங்கள் பற்றி பல கட்டுரைகள் படித்திருப்பதாகவும், வி.பி.சர்மா என்ற நுகர்வோர் துறை அதிகாரி தெரிவித்துள்ளார். சர்க்கரை நோயாளிகள் ஒட்டகப் பாலை அருந்துமாறு தாம் கேட்டுக் கொள்வதாகவும், நோய் இல்லாதவர்களும் கூட இதனை தினமும் குடித்து வரலாம் என்றும் அவர் கூறினார். ராஜஸ்தானின் கிராமப்புற பகுதிகளைச் சேர்ந்த வயதானோர் இதுபற்றிக் கூறுகையில், ஒட்டகப் பாலில் ஆண்மையை அதிகரிக்கும் மருத்துவ சக்தி உள்ளதாகக்கூறுகிறார்கள்.

ஒட்டகப் பால் பாக்கெட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் மாதத்தில், நாளொன்றுக்கு ஆயிரம் லிட்டர் சராசரியாக விற்பனை செய்யப்படுகிறது. ராஜஸ்தான் முழுவதிலும் நாளொன்றுக்கு சுமார் ஒரு லட்சம் லிட்டர் ஒட்டகப்பாலை பெறமுடியும் என்று ஆர்எம்எஃப் ஏற்கனவே மதிப்பீடு செய்துள்ளது.

ஆண்மையின்மை சமீப காலங்களில் அதிகரித்து வருவதும் ஒட்டகப்பால் நுகர்வை முக்கியப் படுத்தியிருப்பதாகத் தெரியவந்துள்ளது. துவக்கத்தில் சர்க்கரை நோயாளிகளிடம் இருந்தும், நடுத்தர வயதுடைய நுகர்வோரிடம் இருந்தும் ஒட்டகப் பாலுக்கு நல்ல வரவேற்பு இருப்பதாகவும், சந்தையில் அதிக அளவில் ஒட்டகப்பால் கிடைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் சராஸ் பால் பண்ணை நிர்வாக இயக்குனர் மதுக்கர் குப்தா தெரிவித்துள்ளார்.

ஒட்டகப் பாலில் லெனோலின் அமிலம் உட்பட 6 வகையான அமிலங்கள் காணப்படுவதாகவும் உடலின் சுருக்கங்களை போக்குவது உள்ளிட்ட தோல் தொடர்பான வியாதிகளையும் நிவர்த்தி செய்வதாக உள்ளது என்றும் தெரிய வந்துள்ளது. எது எப்படியோ ஒட்டகப் பால் விரைவில் அனைத்து இடங்களிலும் கிடைக்கப்போவது உறுதி. ஆதாரம்: http://tamil.webdunia.com/miscellaneous/health/articles/0807/31/1080731054_1.htm





1400 வருடங்களுக்கு முன்னரே பெருமானார் (ஸல்) அவர்கள் ஒட்டகப் பாலில் நோய் நிவாரணி இருப்பதைக் கண்டறிந்துக் கூறினார்கள்.



அன்று பெருமானார் (ஸல்) அவர்கள் கூறிய மருத்துவக் குறிப்புகள் அனைத்தையும் இன்றைய மருத்துவர்களின், இன்னும் வேறுப் பல ஆராய்ச்சியாளர்களின் விரிவான ஆய்வறிக்கைள் மெய்ப்படுத்தி வருகின்றன.



மதீனா வந்த 'உக்ல்' மற்றும் 'உரைனா' குலத்து மக்கள் சிலருக்கு நோய் ஏற்பட்டது. அவர்கள் 'இறைத்தூதர் அவர்களே! எங்களுக்கு அடைக்கலம் அளித்து உணவும் அளியுங்கள்'' என்று கேட்டனர். (அவ்வாறே அவர்களுக்கு அடைக்கலம் தந்து உணவும் அளிக்கப்பட்டது. பசிப் பிணி நீங்கி) அவர்கள் நலம் பெற்றபோது 'மதீனா(வின் தட்ப வெப்பநிலை) எங்களுக்கு ஒத்து வரவில்லை'' என்று கூறினர். அவர்களை நபி(ஸல்) அவர்கள் பாறைகள் நிறைந்த 'அல்ஹர்ரா' எனும் இடத்தில் தம் ஒட்டகங்கள் சிலவற்றுடன் தங்கச்செய்து 'இவற்றின் பாலை அருந்துங்கள்'' என்று கூறினார்கள். அவர்கள் குணமடைந்தபோது நபி(ஸல்)அவர்களின் (ஒட்டக) மேய்ப்பாளரைக் கொன்றுவிட்டு அவர்களின் ஒட்டகங்களை இழுத்துச்சென்றுவிட்டனர்... அனஸ்(ரலி) அவர்கள் கூறிய புகாரியின் ஹதீஸ் சுருக்கம். 5685.



இந்தளவுக்கு மனித இனத்தின் ஆரோக்கியத்திற்காக அபரிமிதமான சத்தையும்> நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்தப் பாலை வழங்கக் கூடிய ஒட்டகம் பயணிகளை சுமந்து செல்வதால் எப்பொழுதாவது சோர்வடையும் நிலை ஏற்பட்டால் தனக்கு தேவையான சத்தை எங்கிருந்து பெறுகிறது தெரியுமா ?



அதன் உடம்பில் புரோட்டீன் என்ற சத்து குறைய ஆரம்பித்ததும் சிறுநீரில் வெளியாகும் யூரியா என்ற கழிவின் அளவை குறைத்துக்கொண்டு அதை (Microbial Synthesis) புரோட்டீனோடு கலந்து சக்தியாக மாற்றிவிடுகிறது அதன் சிறுநீரகம். சுப்ஹானல்லாஹ் அல்லாஹ் தூயவன்.



ஏகஇறைவன் அல்லாஹ் கைதேர்நத படைப்பாளன் என்பதற்கு இதை விட ஒரு சான்றுத் தேவையா ? ஒட்டகத்திற்குள் இன்னும் ஏராளமான சான்றுகளை இறைவன் வைத்துப் படைத்திருக்கிறான்.



இனி வரும் காலங்களில் அல்லாஹ் நாடினால் அதையும் பார்க்கலாம்.



أَفَلَا يَنظُرُونَ إِلَى الْإِبِلِ كَيْفَ خُلِقَتْ



ஒட்டகம் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது என்பதை அவர்கள் பார்க்க வேண்டாமா? 88:17.

------------------

وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ



நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன். 3:104

ذَلِكُمُ اللّهُ رَبُّكُمْ لا إِلَـهَ إِلاَّ هُوَ خَالِقُ كُلِّ شَيْءٍ فَاعْبُدُوهُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ وَكِيلٌ 6:102

அவனே உங்கள் இறைவனாகிய அல்லாஹ். அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவன் ஒவ்வொரு பொருளையும் படைத்தவன். எனவே அவனையே வணங்குங்கள்! அவன் அனைத்துப் பொருட்களுக்கும் பொறுப்பாளன். 6:102

இதற்கு முந்தைய எமது 'அசந்துப் போகும் அதிசயம்' எனும் தலைப்பில் ஒட்டகப் பாலில் மனித சமுதாயத்திற்கு கிடைக்கும் பயன்கள் பற்றி மருத்துவ ஆராய்ச்சிகள் கண்டுப் பிடித்துக் கூறியதையும் அதையே 1400 வருடங்களுக்கு முன் மொத்த மனித சமுதாய மேம்பாட்டிற்காக இறக்கி அருளப்பட்ட உலகப் பொதுமறை திருக்குர்ஆனில் ஏகஇறைவன் கால்நடைகளில் உங்களுக்கு படிப்பினை உள்ளது. அதன் வயிற்றில் உள்ளதிலிருந்து உங்களுக்கு பருகத் தருகிறோம் அவற்றில் உங்களுக்கு ஏராளமான பயன்களும் உள்ளன அவற்றை உண்ணுகின்றீர்கள். திருக்குர்ஆன் 23:21. என்றுக் கூறியதையும்> திருக்குர்ஆனுடைய மெஸேஞ்சர் முஹம்மது நபி (ஸல்) அவர்களும் ஏகஇறைவனின் கூற்றுக்கொப்ப நோயாளிகளுக்கு நோய் தீர்க்கும் மருந்தாக ஒட்டகப்பாலை தொடர்ந்து அருந்தி வருமாறு உத்தரவிட்டு நோயாளிகள் நோய் குணமடைந்ததையும் எழுதி இருந்தோம்.



பாலைவனக் கப்பல்

ஒட்டகத்திற்கு பாலைவனக் கப்பல் என்று செல்லமாக அழைக்கப்படுவதுண்டு ஏன் என்றால் ? அன்று பாலைவனத்திலிருந்து வெளிப் பிரதேசங்களுக்கு அங்கு வாழ்ந்த மக்களையும், அவர்களுடைய வணிகப் பொருட்களையும் சுமந்து கொண்டு குண்டும், குழியும், மணல் முட்டுகளுமானப் பகுதிகளில் தங்கு தடையின்றி சவாரி செய்து கொண்டிருக்கும் அதனால் அதற்கு பாலைவனக் கப்பல் என்று சாதி, மத பேதமின்றி உலகில் அனைவராலும் கூறப்படுவதுண்டு.



அதைப் பிரதிபலிக்கும் விதமாக முத்து முருகன் என்ற சகோதரர் பாலைவனக்கப்பலாகிய ஒட்டக்ததைப் பற்றி கீழ்காணுமாறு கவிதை ஒன்றை அழகாக இயற்றி இருக்கின்றார்.



உயிர்க் கப்பல்!
பரந்தமணற் பெருங்கடலில்
பயணம் செல்லும் கப்பல் - இது
பக்குவமாய் உயர் முதுகில்
பாரம் சுமக்கும் கப்பல்!

வறட்சி மிகு நீரிலாவனத்தில்

போகுங் கப்பல் - இது
வாலும் முதுகும் கால்கள் நான்கும்
வாய்த்திருக்கும் கப்பல்!

நீர்குடிக்க வாய்ப்பிருந்தால்
நிறையக் குடிக்கும் கப்பல் - மிக
நெடும் பொழுது தாகம் தாங்கி
நிற்கும் உயிர்க் கப்பல்!

பார் முழுதும் உள்ள மக்கள்
பார்த்து வியக்கும் கப்பல் - இது
பாதம் மணலில் புதைந்திடாமல்
பாங்காய்ப் போகும் கப்பல்!

ஊர்ப் பயணம் செல்ல மக்கள்
ஓட்டிப் போகும் கப்பல் - மிக
உயர்ந்த உடலும் தடித்த தோலும்
உடையதிந்தக் கப்பல்!

பார்த்துப் புல்லை மேய்ந்து நல்ல
பால் கொடுக்கும் கப்பல் - இது
பாலைவனக் கப்பல் தம்பி
பார்! பார்! ஒட்டகக் கப்பல்!

- திட்டக்குடி முத்து முருகன்



சோலை வனமாவதற்கு முன்னிருந்த பாலைவனத்தில் வாழ்க்கை நடத்திய மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை பாலைவனப் பகுதிகளுக்குள் எளிதில் கொண்டு வருவதற்கும் பாலைவனத்தில் விளையக் கூடிய பேரீச்சம் பழம்> கோதுமைகளை எடுத்துச்சென்று வெளிச் சந்தையில் விற்றுக் காசாக்குவதற்கும் போக்குவரத்திற்குரிய வாகனங்கள் செல்வதற்கான வழித் தடங்கள் அறவேக் கிடையாது.

மிகப்பெரிய பொருளாதாரத்தை முடக்கி சாலைகள் உருவாக்க முடியாத அளவுக்கு அரசு கஜானாவில் வறட்சி நிலை.

மேற்கத்திய நாடுகளில் விஞ்ஞான வளர்ச்சி அடைந்து மோட்டார் வாகனங்கள் கண்டுப் பிடித்துப் பலநூரு ஆண்டுகள் ஆனப்பிறகும் பாலைவனத்து கடலுக்கடியில் கருப்புத் தங்கம் கண்டெடுக்கும் வரை இதே நிலை நீடித்தது.

உலகில் வாழும் மனித இனம் உட்பட மற்ற அனைத்து உயிரினங்களையும் இறைவன் படைத்தான் அவர்களுக்கு வாழ்வாதாரம் அவனே வழங்குவதாக திருமறைக் குர்ஆனில் கூறுகிறான். 11:6. பூமியில் உள்ள உயிரினம் எதுவாக இருந்தாலும் அவற்றுக்கு உணவளிப்பது அல்லாஹ்வின் பொறுப்பாகும். அவற்றின் வசிப்பிடத்தையும், அவை சென்றடையும் இடத்தையும் அவன் அறிவான். ஒவ்வொன்றும் தெளிவான பதிவேட்டில்157 உள்ளது.
இதேப் போன்று இன்னும் பல வசனங்கள் திருமறைக் குர்ஆன் நெடுகிலும் பல இடங்களில் காணலாம் பார்க்க 6:14, 6:151, 29:79, 29:60, 42:19, 3:37, 3:169.



மேற்கானும் வாழ்வாதாரம் இறைவன் புறத்திலிருந்தே மனிதர்களை வந்தடைகிறது என்பதை அவ்வப்பொழுது தக்க சான்றுகளுடன் மனிதர்களுக்கு இறைவன் நிரூபித்துக் கொண்டே இருப்பான்.



அதனடிப்படையில் வெளிநாடுகளுக்கு சென்றுத் திரும்புவதற்கு வசதியில்லாத பாலைவனத்தில் வாழ்க்கை நடத்திய மக்களுக்காக அவர்கள் தங்கு தடையின்றி பயணிக்கக் கூடிய வகையில் அவனுடைய படைப்பாற்றல் மூலமாக ஒட்டகத்தை ( பாலைவனக் கப்பலை )ப் படைத்து வழங்கினான்.



ஒட்டகத்தின் உட்புறத்தில் ஏகஇறைவனால் அமைக்கப்பட்ட உறுப்புக்களைப் பார்வையிட்டால் அது இன்றைய வாகனங்களுக்குள் பொருத்தப்பட்டிருக்கும் பாகங்களைப் போலவே இருக்கும்.



பெட்ரோலில் ஓடும் இன்றைய வாகனமும் -தண்ணீரில் ஓடிய அன்றைய பாலைவனக் கப்பலும்.

இன்றைய வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள பெட்ரோல் டேங்குக்கு நிகராக ஒட்டகத்தின் வயிற்றில் இறைவன் பொருத்திய அதிசய வாட்டர் டேங்க்.



நீர் கிடைத்தால் ஒட்டகம் 100 லிட்டர் தண்ணீரை பத்து நிமிடங்களுக்குள் பம்பிங்க் செய்து கொள்ளும் இவ்வாறு பம்பிங்க் செய்து அனுப்பிய 100 லிட்டர் நீரும் அதனுடைய பிற உறுப்புக்களுக்கு எவ்வாறுப் பிரித்து அனுப்புகிறது என்பதைப் படித்தால் உலகின் மூலையில் ஒரு இறைமறுப்பாளன் இருந்தாலும் இறைநம்பிக்கையாளனாக மாறி விடுவான்.





மற்ற உயிரிணங்களுக்கு இருப்பதை விட வித்தியாசமான ரெத்தத்தின் சிகப்பனுக்கள்

பம்பிங்க் செய்து அனுப்பும் நீரில் குறிப்பிட்ட அளவு நீரை முதலில் இரத்தத்தின் சிகப்பு அணுக்களுக்கு அனுப்புகிறது.
அதற்காக இரத்தத்தின் சிகப்பு அணுக்கள் அதன் உண்மையான அளவை விட 200 மடங்கு பிரிந்து இடமளிக்கிறது.
குட்டிப் போட்டு பாலூட்டும் (மனிதன் உட்பட) மற்ற பிராணிகள் அனைத்திற்கும் இரத்தத்தின் சிகப்பு அணுக்கள் வட்ட வடிவமாக இருக்கும். ஆனால் ஒட்டகத்திற்கு மட்டும் முட்டை வடிவத்தில் இருக்கும்.


நீரிழப்பினால் உடல் வறட்சி ஏற்படும் சமயத்தில் மற்ற பிராணிகளின் (மனிதன் உட்பட) இரத்தம் பாகு நிலைக்கு வந்து விடும். அதன் காரணத்தால் வாழத் தேவையான இதமான சூட்டை தோலுக்கு அளிக்க முடியாமல் எகிறும். பிறகு, சூட்டினால் வெடிப்பு மரணம் (Explosive Heat Death) நிகழ்ந்துவிடும். ஆனால் ஒட்டகத்திற்கு மட்டும் அப்படி நேராத அளவுக்கு அதுனுடைய இரத்தத்தின் சிகப்பணுக்கள் தண்ணீரைத் தேக்கி வைத்துக் கொள்கிறது.



கை தேர்ந்த படைப்பாளனாகிய இறைவனின் திட்டமிட்ட ஏற்பாடு.

பிற நாடுகளின் நெடுஞ்சாலைகளில் குறிப்பிட்ட அளவு தூரத்திற்கு குடிநீர் குழாய்கள், அல்லது குட்டைகள், குளங்கள் இருப்பது போல் பாலைவனத்தில் இருக்காது அதனால் மற்ற உயிரினங்களுக்கு இருப்பது போன்ற அளவில் ஒட்டகத்திற்கும் இரத்தத்தின் சிகப்பணுக்களின் அளவு இருக்குமேயானல் குறைந்தளவு நீரையே தேக்கிக்கொள்ள முடியும்.



நீர் கிடைக்காத வழியில் பயணிகளையும், சரக்குகளையும் சுமந்த வண்ணம் சென்று கொண்டிருக்கும் பொழுது இரத்த ஓட்டத்திற்கு தேவையான தண்ணீரை இரத்தத்தின் சிகப்பணுக்கள் சப்ளை செய்ய முடியாத நிலை ஏற்பட்டு இரத்தம் பாகுபோல் உறைந்து ஒட்டகத்திற்கு வெடிப்பு மரணம் (Explosive Heat Death) ஏற்பட்டு விட்டால் படைப்பாளனுடைய வல்லமைக்கு குந்தகம் ஏற்பட்டு விடும் அதனால் எல்லாம் அறிந்த அல்லாஹ் ரப்புல்ஆலமீன் அதன் இரத்தத்தின் சிகப்பணுக்களை மற்ற உயிரிணங்களுக்கு இருப்பதைப் போல் அல்லாமல் பெரிதாக அமைத்தான்.



பெரிய அளவிலான இரத்தத்தின் சிகப்பணுக்கள் நீர் கிடைக்கும்பொழுது தேவைக்கதிமாகவே தேக்கி வைத்துக் கொண்டு இரத்தத்தை உறைய விடாதளவுக்கு இரத்தத்திற்கு தண்ணீர் சப்ளை செய்து கொண்டிருக்கிறது. அதனால் அளவுக்கதிகமான வெப்பத்தினால் ஒட்டகத்தின் உடல் திசுக்களில் உள்ள நீர் குறைந்தாலும் இரத்தத்தில் நீர் அளவு குறையாமல் இருக்கும்.



அதனால் ஒட்டகத்தின் உடலில் 40% நீர் குறைந்தாலும் கூட எந்த பாதிப்பும் இல்லாமல் வாழும்.
ஆனால் மனிதர்களின் உடலில் 12% நீர் குறைந்தாலே போதும் கதை முடிவுக்கு வந்து விடும்.
குட்டிப் போட்டுப் பாலூட்டும் (மனிதன் உட்பட) பிராணிகளில் நீரிழப்பை தாங்கிக் கொள்வதில் படைப்பாளனின் வல்லமையை பறைசாற்றும் ஒட்டகத்திற்கு நிகராக வேறு எதுவுமில்லை.



எரி பொருள் நிரப்பி வாகனத்தை ஸ்டார்ட் செய்ததும் எரி பொருள் அசுர வேகத்தில் எஞ்ஜினை அடைவதைப் போல்


ஒட்டகம் தண்ணீரை பம்பிங் செய்ததும் தண்ணீர் அசுர வேகத்தில் இரத்தத்தின் சிகப்பணுக்களை நோக்கிப் பாய்கிறது.


அவ்வாறு தண்ணீர் பாய்ந்தோடி வருவதை அறிந்த அதனுடைய சிகப்பு அனுக்கள் பழைய நிலையை விட அதிகமாக விரிந்து இடமளித்து அதகிபட்ச தண்ணீரை உறிஞசிக் கொண்டு ரெத்தத்தை உறைய விடாமல் பாதுகாக்கிறது.



அதனால்



எத்தனை தொலை தூரமும்,

எவ்வளவு அதிகமான சூட்டிலும்,



சளைக்காமல் பயணிகளையும், சரக்குகளையும் சுமந்து கொண்டு பாலைவனக் கப்பல் (ஒட்டகம்) ஓடிக் கொண்டே இருக்கும். சுப்ஹானல்லாஹ் இறைவன் தூய்மையானவன். ... ஒட்டகம் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது என்பதை அவர்கள் பார்க்க வேண்டாமா? 88:17.



வாகனத்தின் பெட்ரோல் டேங்கின் எரிபொருள் தீர்ந்து விட்டால் லட்சக்கணக்கான ரூபாய் விலைக் கொடுத்து வாங்கிய ''வாகனம்'' பாதியில் நின்றுவிடும் அவ்வாறு நின்று விட்டால் மில்லியனர், பில்லியனரும் கூட நடராஜா தான்.



ஆனால்



இறைவன் கொடுத்த அருட்கொடை ஒட்டகத்தின் வாட்டர் டேங்கில் தண்ணீர் வற்றி விட்டாலும் தண்ணீரின் தேவை இன்றி ஒட்டகம் படு ஜோராக ஓடிக் கொண்டே இருக்கும் அதன் மேல் அமர்ந்து பயணிப்பவர் தங்கு தடையின்றி பயணத்தைத் தொடர முடியும்.



அடுத்த அதிசயம்

நீரில்லாமல் வறட்சி ஏற்பட்டு நீண்ட இடைவெளிக்கு பிறகு நீர் குடித்தால் அது குறைந்த அளவாக இருந்தால் கூட மற்ற பிராணிகள் (மனிதன்) நீர் போதை (Water Intoxication) ஏற்பட்டு இறப்பு நிகழ்ந்து விடும். ஆனால் ஒட்டகம் வறட்சிக்கு பிறகு 100 லிட்டர் குடிக்கும், ஆனால் சாகாது.



சரி ரெத்தத்தின் சிகப்பணுக்கள் தண்ணீரை அதிகம் உறிஞ்சிக் கொள்வதால் ரெத்தத்தை உறைய விடாமல் பாதுகாக்கிறது என்பதைக கண்டோம்.



ஒட்டகம் உயிர் பிராணி தானே அதற்கு தாகம் ஏற்பட்டு நாக்கு வறண்டு விடாதா ?

நாக்கு வறண்டு சுமை இழுக்க முடியாமல் நமது ஊர் மாடுகள் போன்று அப்படியே உட்கார்ந்து விடாதா ?



என்ற சந்தேகம் ஏற்படலாம் அதையும் அல்லாஹ் நாடினால் அடுத்து எழுதுவோம்.



இறை நம்பிக்கையை விதைப்பது மட்டுமே நமது நோக்கமன்றி வேறில்லை.

இனம், மொழிக் கடந்தும் இறை நம்பிக்கையைப பரப்புவோம்.



இனவெறி,

மொழி வெறி,
கடவுள் அருளிய மாரக்கத்தில் இல்லை.


'அறிந்து கொள்ளுங்கள் அறியாமைக் காலப் பழக்க வழக்கங்கள் அனைத்தும் வேரோடு அழிக்கப்பட்டுவிட்டன'.



'ஓர் அரபியருக்கு, அரபியரல்லாதவரை விடவோ, ஓர் அரபியரல்லாதவருக்கு ஓர் அரபியரை விடவோ எந்தச் சிறப்பும் மேன்மையும் இல்லை,



நீங்கள் அனைவரும் ஆதமின் (முதல் மனிதரின்) வழித் தோன்றல்களே! ஆதமோ மண்ணால் படைக்கப்பட்டவராவார்'

என்று இறைவனின் இறுதித் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறி இனவெறி, மொழி வெறியை தடை செய்தார்கள். –நபிமொழி




وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ



நன்மையை ஏவிஇ தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன். 3:104

ஏகஇறைவனின் திருப்பெயரால்....

إِنَّ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالأَرْضِ وَاخْتِلاَفِ اللَّيْلِ وَالنَّهَارِ لآيَاتٍ لِّأُوْلِي الألْبَابِ 190

வானங்களையும்> பூமியையும் படைத்திருப்பதிலும் இரவு> பகல் மாறி மாறி வருவதிலும் அறிவுடைய மக்களுக்குப் பல சான்றுகள் உள்ளன. 3:190.

ஏகஇறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக !



இதற்கு முன் ஒட்டகத்தினுடைய இரத்தத்தின் சிகப்பனுக்கள் தண்ணீரை அதிகம் உறிஞ்சிக் கொள்வதால் அது இரத்தத்தை உறைய விடாமல் பாதுகாத்துக் கொள்கிறது அதனால் பயணிகளையும், அவர்களுடைய சுமைகளையும் சுமந்து கொண்டு பல்லாயிரக்கணக்கான கிலோ மீட்டர் தூரம் தங்கு தடையின்றி ஓடிக் கொண்டே இருக்கிறது என்பதைப் பார்த்தோம்.



ஆனாலும்



ஒட்டகம் ஓர் உயிர் பிராணி என்பதால் தாகம் ஏற்பட்டு நாக்கு வறண்டு விடாதா ? நாக்கு வறண்டு சுமை இழுக்க முடியாமல் நாது ஊர் மாடுகள் போன்று அப்படியே உட்கார்ந்து விடாதா ? என்ற சந்தேகம் ஏற்படலாம்.



அப்படியே உட்கார்ந்து விடும் என்பதில் எவ்வித சந்தேகமும் கிடையாது.

ஒட்டகம் என்ன ?

மனிதனுடைய நிலையே அது தான் !



மனிதனுக்குப் பசியும் தாகமும் ஏற்பட்டு விட்டால் தனது அடுத்த வேலைகளை எல்லாம் ஓரங்கட்டி விட்டு முதலில் பசியையும், தாகத்தையும் முடித்துக் கொள்வான் இல்லை என்றால் மொத்த இயக்கமும் நின்று விடும் மற்ற அனைத்து உயிரிணங்களுடைய நிலையும் இது தான்.



இதே நிலை ஒட்டகத்திற்கும் ஏற்பட்டால் அதன் மீது அமர்ந்து பயணிக்கும் பயணியுடைய நிலை என்னாவது ? ஒட்டகம் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது என்பதை அவர்கள் பார்க்க வேண்டாமா? 88:17. என்று இறைவன் கூறுவதில் அர்த்தமில்லாமல் போய்விடும் ( நவூது பில்லாஹ் - அல்லாஹ் நம்மை காக்க வேண்டும் )



அல்லது ஒட்டகம் வயிற்றில் சேமித்து வைத்திருந்த தண்ணீரை கக்கி மீண்டும் குடிக்க முடியுமா ?

அவ்வாறு கக்குவதாக இருந்தால் கக்கிய அனைத்து நீரையும் அசுர வேகத்தில் வறண்ட பூமி உறிஞ்சி விடும்.



எல்லாம் அறிந்த அல்லாஹ் ரப்புல் ஆலமீன் மனிதர்கள் வியக்கத்தக்க வகையில் அதற்கான ஏற்பாடு ஒன்றையும் அதனுடைய உடலின் உட்புறத்திலேயே அமைத்து வைத்தான்.



ஒட்டகம் நீரை பம்பிங் செய்து கொண்டப் பொழுது அதில் குறிப்பிட்ட அளவு தன்னீரை இரத்தத்தின் சிகப்பணுக்கள் உறிஞ்சிக் கொள்வதைப் போல் குறிப்பிட்ட அளவு தண்ணீர் ஒட்டகத்தின் திமிலுக்கு செல்கிறது திமிலுக்குச் சென்றதும் அது கொழுப்பாக மாறுகிறது ( அதனுடைய திமில் சுமார் 45 kg எடை இருக்கும், அதில் அதிகமாக கொழுப்பு இருக்கும்) உணவோ> நீரோ கிடைக்காத வறட்சியான நேரத்தில் அதற்கு தாகமும் பசியும் ஏற்பட்டால் அதன் திமிலின் கொழுப்பிலிருக்கும் 'ஹைட்ரஜனோடு' அது சுவாசிக்கும் காற்றில் உள்ள 'ஆக்ஸிஜனை' கலந்து நீராகவும், உணவாகவும் மாற்றிக் கொள்கிறது.



நமது புதிய இல்லத்திற்கு பால்கனியில் வாட்டர் டாங்க் அமைப்பது போல் ஒட்டகத்தின் உடலின் மேல்மட்டத்தின் மையப்பகுதியில் திமிலை இறைவன் அமைத்தான் அதனால் ஒட்டகத்தின் மூளை அதற்கு பசியையும் தாகத்தையும் தூண்டியதும் அசுர வேகத்தில் திமிலின் கொழுப்பிலிருக்கும் 'ஹைட்ரஜனோடு' அது சுவாசிக்கும் காற்றில் உள்ள 'ஆக்ஸிஜனை' கலந்து நீராகவும், உணவாகவும் மாற்றியதும் உணவையும், நீரையும் இழுத்துச் சென்று உரிய இடத்தில் சேர்த்து பசியையும், தாகத்தையும் கட்டுப்படுத்தக் கூடிய ‘வேகஸ்’ நரம்புகள் தனது வேலையை சுறு சுறுப்பாகச் செய்து ஒட்டகத்தின் தாகத்தையும், பசியையும் கட்டுப்படுத்தி விடுகிறது.

வேகஸ் நரம்புகளின் பணிகளில் சில: இதயத்துடிப்பைக் கட்டுப்படுத்துவது, உணவு உடலில் பல் வேறு பகுதிகளில் நகர்வதற்குத் துணை செய்யும் சுற்றிழுப்பசைவுக்கு (peristalsis) துணை செய்வது, வாயில் உள்ள பல தசைகளை இயக்குவது, பேசுவதற்குத் துணை செய்யும் குரல்வளை தசைகளை இயக்குவது, மூச்சு விடுவதற்குத் துணை செய்வது, காதின் புற செவி மடல்களில் இருந்து உணர்வு பெறுவது, மண்டை ஓட்டின் தசைகள் சிலவற்றைக் கட்டுறுத்துவது, பெருங்குடலின் சில பகுதிகளை கட்டுப்படுத்துவது என்று பல பணிகளைக் கட்டுறுத்தும் நரம்புகள் ஆகும் . வேகஸ் நரம்பு - தமிழ் விக்கிபீடியா


இது சாத்தியப்படுமா ?



வாய் வழியாக அருந்தி நாக்கு அதனுடைய சுவையை உணர்ந்து இறப்பைக்கு அனுப்பினால் தான் பசியும்> தாகமும் அடங்கியதாக உணர்வுகள் ஏற்படும் என்ற ஞாயமான சிந்தனை எழலாம்.



சூழ்நிலைக்கொப்ப மாற்றங்கள் செய்தே ஆகவேண்டும் உதாரணத்திற்கு உடல் நிலை கவலைக்கிடமாக இருக்கும் ஒருவருக்கு வாய் திறந்து உணவு உண்ண முடியாத நிலை ஏற்பட்டால் வாய் திறந்து அவரால் உணவு உண்ண முடியாது என்பதற்காக அவரை அப்படியே வைத்து சிகிச்சை அளிப்பதில்லை அவர் பூரண குணம் அடையும் வரை டியூப் மூலம் மூக்கின் வழியாக திறவ உணவுகள் நேரடியாக இறப்பைக்கு அனுப்பப்படுகிறது அவ்வாறு அனுப்பப் பட்டால் தான் அவரால் முழு சிகச்சைப் பெற முடியும் மருத்துவர் அளிக்கின்ற ஹெவிடோஸ் களுக்கு வயிறு காலியாக இருந்தால் சிகிச்சைக்காக அளிக்கப்படுகின்ற மருந்துகளே நோயாளிகளுக்கு மரணமாக மாறிவிடும்.



டியூப் மூலம் மூக்கின் வழியாக உணவேற்ற முடியும் என்று மனிதனே சிந்தித்தால் ?

மனிதனைப் படைத்த இறைவன் எப்படி எல்லாம் சிந்தித்திருப்பான் ?



இறைவன் ஓட்டகத்தை வறண்ட பூமிக்கு ஒரு வாகனமாக வடிவமைத்தக் காரணத்தால் அது பயணிக்கும் வழிகளில் உணவும், நீரும் எளிதில் கிடைக்காது என்பதால் அதனுடைய உடலின் உட்புறத்தில் மெகா ஏற்பாடு ஒன்றை செய்து அது தாமாக இயங்கிக் கொள்ளும் நிலையில் அதனுடைய அமைப்பை ஏற்படுத்தினான்.



இறைவனின் இந்த மெகா செட்டப் காரணத்தால் ஒட்டகம் உணவு மட்டும் கிடைத்தால்> நீரின் தேவையில்லாமல் ஒரு மாதம் பயணம் செய்யும். உணவோ> நீரோ கிடைக்காத பட்சத்தில் கூட எந்த தேவையுமில்லாமல் ஒரு மாதம் பயணம் செய்யும். குளிர்காலங்களில் ஆறு மாதம் வரை கூட நீர் குடிக்காமல் பயணிக்கும்.



இன்று மனிதன் கண்டுப் பிடிக்கும் எலக்ட்ராணிக் உபகரணங்களில் எந்தெந்த இடங்களில் எந்தெந்த ஒயர்களைப் பொருத்த வேண்டும், அவைகளை சீராக இயக்குவதற்கான ஸ்விட்சை எந்த இடத்தில் அமைக்க வேண்டும் என்பனவற்றை துல்லியமாக கண்டுப் பிடித்து அமைக்கிறான்.



மனிதனே இப்படி என்றால் ?

அவனைப் படைத்த படைப்பாளன் எப்படி எல்லாம் சிந்தித்திருப்பான் ?



உயிரிணங்களின் உடலுக்குள் எந்தெந்த இடத்தில் எவ்வாறான உறுப்புக்களைப் பொருத்தி அந்தந்த உறுப்புகள் இயங்குவதற்கான நரம்புகளை அமைத்து எந்தெந்த நரம்புகளுக்கு எந்தெந்த உறுப்புக்கள் என்பனவற்றை இயக்குவதற்கு மூளை என்ற ஒரே ஸ்விட்சை இறைவன் அமைத்தான் சுப்ஹானல்லாஹ்.



மனித மூளை என்பது மனிதரின் மையநரம்புத் தொகுதியினுடைய மையமும், சுற்றயல் நரம்புத்தொகுதியினுடைய அடிப்படை கட்டுப்பாட்டு நிலையமுமாகும். மனிதமூளை, சிக்கல் தன்மை குறைந்ததும் பிரக்ஞை இன்றியும் நிகழும், மனிதரின் இச்சை இன்றிய செயற்பாடுகளான சுவாசம், சமிபாடு, இதயத்துடிப்பு போன்ற செயற்பாடுகளையும், பிரக்ஞையுடன் நிகழும் சிந்தனை, புரிதல், தர்க்கம் போன்ற சிக்கலான உயர்நிலை செயற்பாடுகளையும் கட்டுப்படுத்துகிறது. மற்றைய எல்லா உயிரிகளையும் விட இத்தகைய சிக்கலான உயர்நிலை செயற்பாடுகளை சிறப்பாக கையாளும் திறனை மனித மூளை பெற்றிருக்கிறது. மனித மூளை - தமிழ் விக்கிபீடியா (Tamil ...

கோவேறு கழுதைகள், மாடுகள் போன்ற பாரம் சுமந்துப் பயணிக்கும் வனவிலங்குகளில் மற்ற விலங்குகளிலிருந்து மலைக்கும் முகடுக்கும் உள்ள அளவு ஒட்டகம் வித்தியாசப்படுகிறது.


வித்தியாசப்படுவதால் தான் இறைவன் ஒட்டகம் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது என்பதை அவர்கள் பார்க்க வேண்டாமா? 88:17. என்றுக் கூறி அதை ஆய்வு செய்யக் கூறுகிறான்.

எங்கெல்லாம் வித்தியாசம் இருக்கின்றதோ அங்கெல்லாம் இறைவனின் அத்தாட்சிகள் இருப்பதைக காணலாம் என்று இறைவனேக் கூறுகிறான். 3:190. வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதிலும் இரவு, பகல் மாறி மாறி வருவதிலும் அறிவுடைய மக்களுக்குப் பல சான்றுகள் உள்ளன.

உதாரணத்திற்கு ஒட்டகமும், ஒட்டகச்சிவிங்கியும் ஒன்றுப்போல் காட்சி அளித்தாலும் அதனுடைய உட்புற உறுப்புக்களில் வித்தியாசத்தை ஏற்படுத்தி அதனுடைய செயல்பாடுகளில் பாரிய மாற்றத்தை இறைவன் ஏற்படுத்தினான். பாரப்பதற்கு ஒன்றுப் போல் இருப்பவைகள் குணநலன்களில், நடைமுறைகளில் மாறுபடும்பொழுது தான் படைப்பாளன் ஒருவன் இருக்கின்றான் என்பது ஊர்ஜிதமாகும். இல்லை என்றால் எல்லாம் தாமாகத் தோன்றியவைகளே, ஒன்ற மற்றொன்றிலிருந்து பரிணாம வளர்ச்சி அடைந்தவைகள் என்ற டார்வினிஸக் கொள்கையை பெரும்பாலான மக்கள் ஏற்றிருப்பார்கள்.

இன்னும் உதாரணத்திற்கு மற்றொறு சான்று கடல் பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக இருக்கும், அதனுடைய நீரும் பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக இருக்கும் ஆனால் அதில் உப்பு நீர் தனியாவும், சுவையான நீர் தனியாகவும் இருக்கிறது அது இரண்டும் ஒன்று சேராதவாறு இறைவன் தடுப்பை ஏற்படுத்தி இருப்பதாக அறிவியல் அறவே வளர்ச்சி அடையாத காலகட்டத்தில் திண்ணைப் பள்ளியில் சென்று பாலர் பாடம் கூடப் படிக்காத முஹம்மது நபிக்கு 1400 வருடங்களுக்கு முன் இறைவன் கூறினான். அவனே இரண்டு கடல்களை ஒன்று சேர்த்துள்ளான். இது மதுரமாகவும், தாகம் தீர்ப்பதாகவும் உள்ளது. அது உப்பாகவும், கசப்பாகவும் உள்ளது. அவ்விரண்டுக்குமிடையே ஒரு திரையையும், வலுவான தடுப்பையும் அவன் ஏற்படுத்தியுள்ளான். (25:53)

மத்திய தரைக்கடலுக்கும், ஜிப்ரால்டரில் உள்ள அட்லாண்டிக் சமுத்திரத்திற்கும் இடையே உள்ள தடுப்பைப்பற்றி திருக்குர்ஆன் சொல்லுகின்ற போது அத்தடுப்போடு இணைந்து நிற்கும் ஒரு தடுக்கப்பட்ட திரை (ஹிஜ்ரம் மஹ்ஜூரா) பற்றியும் குறிப்பிடுகின்றான்.

இரண்டு வெவ்வேறு கடல்கள் ஒன்றாய் சந்திக்கும் இடங்களில் தடுப்பு உள்ளது இந்த தடுப்பு இரு கடல்களையும் பிரித்து விடுகின்றது. இதனால் ஒவ்வொரு கடலும் அதனதன் தட்ப வெட்ப நிலைஇ உப்பின்தன்மை,அடர்த்தி ஆகியவற்றை பாதுகாத்திடும் தனித்துவம் பெற்றுவிடுகின்றது. ஒரு கடலின் நீர் மற்றொரு கடலுக்குள் நுழைந்து கலக்கின்றபோது அது தன் தனிச்சிறப்பு வாய்ந்த இயல்பை இழந்து விடுகின்றது. திருக்குர்ஆன் கூறும் இந்த நிகழ்வை Dr.William Hay (University of Clorado) தனது ஆராய்ச்சியில் உறுதி செய்துள்ளார். http://islamworld.net/docs/it-is-truth/SeasAndOceans.html

அல்லாஹ் நாடினால் அல்லாஹ்வின் அற்புதப படைப்பாகிய ஒட்டக அதிசயத்தை இன்னும் எழுதுவோம்.

இமயம் தொலைக்காட்யில் தினமும் இரவு 10 முதல் 11 மணி வரை ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை நேயர்கள் இந்த பகுதியில் இன்ஷா அல்லாஹ் காணலாம்! வெளிநாட்டில் உள்ள சகோதரர்களுக்கு இமயம் தொலைக்காட்சி சரியாக தெரியாத காரணத்தினால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது!
http://onlinepj.com/ImayamTVPrg.asp


மறைவழி மார்க்கத்தைப் பரப்புவோம் !! மனித நேயத்தை வளர்ப்போம் !!

அறிந்து கொள்ளுங்கள் அறியாமைக் காலப்பழக்க வழக்கங்கள் அனைத்தும் வேரோடு அழிக்கப்பட்டுவிட்டன. ஓர் அரபியருக்கு, அரபியரல்லாதவரை விடவோ, ஓர் அரபியரல்லாதவருக்கு ஓர் அரபியரை விடவோ எந்தச்சிறப்பும் மேன்மையும் இல்லை, நீங்கள் அனைவரும் ஆதமின் (முதல் மனிதரின்) வழித் தோன்றல்களே! ஆதமோ மண்ணால் படைக்கப்பட்டவராவார் -நபிமொழி


وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ



நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன். 3:104


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்