Saturday, August 30, 2008


Islam is the fastest growing religion in the world. Islam is going to dominate many Places in USA and Europe in the next few years, and is now a fiery revival sweeping much of the planet from Africa to Asia to Latin America to Europe to USA.The number of Europeans, Americans, Latinos and Africans converting to Islam is growing rapidly check it out !!CNN WORLD NEWS: Islam is the fastest-growing religion


Islam is Fastest Growing Religion in United States:


Times on line: Thousands of british people convert to islam every year:http://www.timesonline.co.uk/tol/news...

Why European women are turning to Islam:

http://www.csmonitor.com/2005/1227/p01s04-woeu.htmlWashington-Report: The Nation's Fastest Growing Religion


Washington Post: Islam Luring More Latinos


Islam is spreading among Thousands black South Africans


Washington Post: Islam Attracting Many Thousands Survivors of Rwanda Genocidehttp://www.washingtonpost.com/wp-dyn/...

Islam - World's Fastest Growing Religion


Many Converts to Islam Homepage:


More Sources:


Learn more about islam:





Today the fastest growing religion in the World is Islam..spreading through the Sword of intellect and Wisdom .

இஸ்லாம்


இஸ்லாம் الإسلام ("இறைவனிடம் அடைக்கலம்" என்ற பொருளுடைய அரேபிய மொழிச் சொல்) ஒரே இறைவன் மீது நம்பிக்கையை வலியுறுத்தும் சமயங்களுள் ஒன்றாகும். ஆபிரகாமிய சமயக் குடும்பத்தைச் சேர்ந்த இஸ்லாம் மக்கள் தொகை அடிப்படையில் உலகிலேயே இரண்டாவது பெரிய சமயமாகும். இம்மார்க்கம், கி.பி ஏழாம் நூற்றாண்டில் இன்றைய சவுதி அரேபியாவில் வாழ்ந்த முஹம்மது நபி என்பவரை இறுதி இறைத்தூதராக இறைவனால் தேர்ந்தெடுத்து நிறைவு செய்யப்பட்டது என்று உலகளாவிய முஸ்லிம் மக்கள் கருதுகின்றனர். முஸ்லிம்கள் இறைவனை அல்லாஹ் என்று அழைக்கின்றனர்.
முஹம்மது நபி மக்காவில் பதிமூன்றாண்டு காலமும், பிறகு மதினாவில் பத்தாண்டு காலமும் வாழ்ந்தபோது, அவர் மூலம் இறைவனால் வழங்கப்பட்ட வேதமும், முஹம்மது நபியின் சொல், செயல், அங்கீகாரமும் இஸ்லாத்தின் வழிகாட்டிகளாக முஸ்லிம்களால் போற்றப்படுகிறது. அவை, முறையே திருக்குர்ஆன் மற்றும் சுன்னா என்றழைக்கப்படுகிறது.


பொருளடக்கம்[மறை]



புனிதத் தலங்கள்:


மக்காவில் உள்ள மஸ்ஜித் அல் ஹராம், மதீனாவில் உள்ள மஸ்ஜித் அந்நபவி மற்றும் ஜெருசலத்தில் உள்ள மஸ்ஜித் அல்அக்ஸா ஆகிய மூன்று பள்ளிகளும் இஸ்லாத்தின் முப்பெரும் புனிதத் தலங்களாகக் கருதப்படுகின்றன.


இஸ்லாத்தின் அடிப்படைகள் ஐந்து


இஸ்லாம் ஐந்து தூண்களின் மீது நிறுவப்பட்டுள்ளது. அவையாவன:
1. கலிமா: லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மது ரஸூலுல்லாஹ் (வணங்கத்தகுதியானவன் இறைவனைத் தவிர வேறு எதுவுமில்லை. முஹம்மது அல்லாஹ்வின் திருத்தூதர் ஆவார்) என்பதை மனதால் ஏற்று வாயால் மொழிவது. இதை ஈமான் கொள்ளுதல் எனப்படும். 2. தொழுகை: ஒரு நாளைக்கு ஐந்து நேரம் குறிப்பிடப்பட்ட நேரத்தில் தொழுகையை விடாது நிறைவேற்ற வேண்டும். 3. ஜக்காத்: இஸ்லாம் குறிப்பிடும் ஓர் அளவுக்கு மேலுள்ள ஒருவருடைய சொத்திலிருந்து ஏழைவரியாகிய ஜக்காத்தை (பொதுவாக நாற்பதில் ஒரு பங்கு) ஆண்டுதோறும் நிறைவேற்ற வேண்டும். 4. நோன்பு: ஒவ்வொரு வருடமும் ரமதான் மாதம் முழுவதும் நோன்பு நோற்க வேண்டும். உடல் நலமில்லாதவர், வயது முதிர்ந்தோர், குழந்தைகள், அவசிய பயணத்திலிருப்போர் போன்றவர்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 5.ஹஜ்: உடல் நலமும் பொருள் வசதியும் உள்ளவர்கள் மக்காவில் இருக்கும் கஅபா எனும் ஆலயத்தை வாழ்நாளில் ஒருமுறையேனும் தரிசிக்க புனிதப் பணயம் மேற்கொள்ள வேண்டும்.
ஈமான் என்றால் நம்பிக்கை, ஈமான் கொண்டவன் முஃமின் எனப்படுகிறான். ஒரு முஸ்லிம் பெற்றுள்ள எண்ணிலடங்கா அருட்கொடைகளில் ஈடிணையற்றது அவன் பெற்றுள்ள ஈமான்தான். இவ்வுலக வாழ்வாதாரம் அனைத்தையும் இழந்த ஒருவரிடம் ஈமானுடன் அதற்குரிய செயல்பாடுகளும் இருப்பின் நிச்சயமாக அவர் ஈருலகிலும் வெற்றியடைந்து விட்டார். இவ்வுலகில் சகல வசதிகளுடன் வாழும் ஒருவனுக்கு ஈமானும் அதற்குரிய செயல்பாடுகளும் இல்லையெனில் நிச்சயமாக அவன் ஈருலகிலும் தோல்வி அடைந்துவிட்டார் என்பதை பின்வரும் நபிமொழி மூலம் விளங்குகிறது.
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: லாயிலாஹ இல்லல்லாஹ் என அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை எதிர்பார்த்துக் கூறுபவருக்கு அல்லாஹ் நரகத்தை ஹராமாக்கிவிட்டான். (அறிவிப்பவர்: இத்பான்(ரலி), நூற்கள்: புகாரி, முஸ்லிம்)


ஈமானின் அடிப்படைகள் ஆறு:


முஸ்லிம்களின் நம்பிக்கை ஆறு விஷயங்களை அடிப்படையாகக் கொண்டது.
1. அல்லாஹ்வை நம்புவது
2. வானவர்களை நம்புவது
3. வேதங்களை நம்புவது
4. நபிமார்களை நம்புவது
5. மறுமையை நம்புவது
6. விதியை நம்புவது (நன்மை, தீமைகள் அனைத்தும் அல்லாஹ் நிர்ணயித்தபடியே நடக்கிறது என்று நம்புவது).
(ஆதார நூல்: புகாரி)


ஈமானுக்கும், இஸ்லாத்திற்கும் இடையே உள்ளவேறுபாடு

சவுதி அரேபியாவிலுள்ள மதினா நகரில் அமைந்துள்ள மஸ்ஜித் அந்நபவி என்னும் புனிதப் பள்ளி. இதனையொட்டி முஹம்மது நபி மற்றும் முதலிரண்டு கலீஃபா அபூபக்கர், உமர் ஆகியோரின் அடக்கவிடம் அமைந்துள்ளது.
ஈமான் உள்ளத்தோடு தொடர்புடையது, அதன் அம்சங்களை வெளிப்படையாக அறியமுடியாது எனினும் அதன் பிரதிபலிப்பை உணர முடியும்.
இஸ்லாம் உடலோடும் செயல்களோடும் தொடர்புடையவை, செயலை வைத்து வெளிப்படையாக அறிந்து கொள்ளலாம்.
ஈமான் உள்ளத்துடன் தொடர்புடையது இஸ்லாம் கூறும் கடமை உடலுடன் தொடர்புடையது. ஆக மனதால் கொள்கையை ஏற்று நாவால் மொழிந்து உடலால் செயல்படுபவன் முஸ்லிம் ஆவான்.
வெட்கம் உட்பட ஈமானின் கிளைகள் எழுபதிற்கு மேலாகும். அதில் இறுதியானது துன்பம் தரும் பொருளை பாதையிலிருந்து அகற்றுவது.


வெளி இணைப்புகள்: