இஸ்லாத்தை மனித சமூகத்திற்கு எடுத்துரைக்க பல இறைத்தூதர்கள் உலகின் பல பகுதிகளில், பல கால கட்டங்களில், பல மொழிகளில் அனுப்பப்பட்டார்கள். அவர்கள் இஸ்லாத்தை முறையே தத்தமது சமுதாயத்தவருக்கு போதித்தார்கள் என்பது இஸ்லாமிய நம்பிக்கையாகும்.
இவ்வருகையின் இறுதியாகவும் உலகத்தார் அனைவருக்கும் அருட்கொடையாகவும் முஹம்மது(ஸல்) அவர்கள் சுமார் கி.பி 610 - ம் ஆண்டு மக்காவில் இறைதூதராக நியமிக்கப்பட்டார்கள்.
இஸ்லாமிய நம்பிக்கையின் படி அனைத்து இறைத்தூதர்களும் அவர்களின் சமுதாயத்தினருக்குப் போதித்த இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை பின்வருமாறு:
"இறைவன் ஒருவனே! அவன் மட்டுமே படைத்தல், காத்தல், போஷித்தல், பரிபக்குவப் படுத்தல், அழித்தல் உள்பட அனைத்து வல்லமைகளும் கொண்டவன். அவனே உங்களையும் நீங்கள் வாழும் பூமியையும் நீங்கள் காணும் கடல், மலை, விண், விண்மீன்கள், சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், கோள்கள் ஆகியவற்றையும் இன்னும் நீங்கள் காண இயலாத அனைத்தையும் படைத்தவன். வணக்கத்திற்கு தகுதியானவன் அவன் ஒருவன் மட்டுமே. அவனையன்றி வணங்கப்படும் அனைத்தும் அவனது படைப்பினங்களேயன்றி இறைவனல்ல. எனவே ஓரிறைவனான அவனை மட்டுமே வணங்குங்கள்! அவனது வழிகாட்டுதல்கள் இறைத்தூதர்களான எங்கள் மூலம் உங்களை வந்தடைகின்றன. அதனைப் பின்பற்றுங்கள்".